ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, INDIA, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
*ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் படத்தை விடுவேனா? – தயாரிப்பாளர் சரவணன்!*
*ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் படத்தை விடுவேனா? - தயாரிப்பாளர் சரவணன்!*
*இப்போது நிறைய படங்களில் தமிழை தேடவேண்டியுள்ளது - இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்*
*தமிழ் சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க - தயாரிப்பாளர் கே.ராஜன்*
காதல் சுகுமார் பேசும்போது,
தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறக...






