ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FLASHNEWS, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL
ரியோட்டா மீடியா தயாரிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
*ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவ...