தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள்
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக் கிறார் இயக்குனர்.
- கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி
இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழு வேத்தி மூர்க்கன்.
அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத் தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குனர் வடிவமைத் தி ருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கிறது, யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை.
இன்றைய இளைஞர்கள் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று ...









