Thursday, October 10

Hit List Movie Review

Hit List Movie Review

இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா. முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஹிட்லிஸ்ட். சரத்குமார், சமுத்திரகனி, கௌதம்மேனன்ரெடின் கிங்ஸ்லி முனீஸ்காந்த், சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை சி சத்யா

.கதை

சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாழும் நாயகன் விஜய். அம்மா சித்தாரா, தங்கை என அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த மர்ம நபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். அந்த முகமூடி அணிந்த மர்ம நபர் யார்? அந்த முகமூடி அணிந்த மர்ம நபரிடம் இருந்து எப்படி நாயகன் விஜய் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் விடை சொல்லும் படமே ஹிட் லிஸ்ட்

நாயகன் விஜய் கனிஷ்கா அப்பாவித்தனமாக, பயந்த சுபாவம் உள்ளவராக அம்மா தங்கையை காப்பாற்ற போராடும் ஒரு மகனாக நடிப்பில் சண்டைக்காட்சியில் சிறந்த நடிகராக முதல் படத்திலேயே நிரூபித்துள்ளார்.
சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய  படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களைப் போல, அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். சரத்குமார், கௌதம்மேனன், சித்தாரா நடிப்பும் சிறப்பு. ரெடின் கிங்ஸ்லி முனீஸ்காந்த் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்..

K ராம்சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சி.சத்யாவின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலமாகும்.

அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது என்ற தத்துவத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் ஹிட் லிஸ்ட் படம் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்ப்பதற்கு ஏற்ற படம். பூவே உனக்காக, புது வசந்தம், கோகுலம், சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கிய விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா வெற்றி கதாநாயகனாக வளம் வருவார் வாழ்த்துகள்.