இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
நடிகர் சம்பத் ராம் பேசியதாவது…
இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ், இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பெரிய இயக்குநராக வர அவர...