ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, THETERS, TRAILOR
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளது
நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை வித்தியாசமான பார்வையில் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இதற்கு முன் மிகச் சில தமிழ்ப் படங்கள் மட்டுமே பேசிய, உறவுகளின் பின்னால் உள்ள சிக்கல்களை லவ்வர் திரைப்படம் பேசுகிறது.
காதலில் ஒருவருக்கு இன்னொருவர் மேல் ஏற்படும் சந்தேகம், மற்றவருக்கு எப்படி மன உளைச்சலாக மாறும், மற்றும் அது உறவை எப்படி சுமையாக ம...
